அம்பாறை மாவட்டம் மருதமுனை பகுதியில் பணியாற்றி வந்த கல்முனை காதி நீதிமன்ற நீதிபதி மற்றும் அவரது மனைவி, இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் பேரில் இன்று (18) மாலை இலஞ்ச மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தனது வழக்கு தொடர்பாக நீதிபதியின் வீட்டில் அமைந்த அலுவலகத்திற்கு சென்றபோது, அவரிடம் இலஞ்சமாக பணம் கேட்டதாக கடந்த மாதம் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து, இன்று மாறுவேடத்தில் காத்திருந்த புலனாய்வு அதிகாரிகளின் வழிகாட்டலின்படி, குறித்த பெண் சிறு தொகை பணத்தை நீதிபதியின் மனைவியிடம் வழங்கினார். அந்தச் சமயத்தில் ஆணைக்குழு அதிகாரிகள் திடீர் சோதனையிட்டு, நீதிபதியையும் அவரது மனைவியையும் கைது செய்து, கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
இந்த சம்பவம் நீதித்துறைச் சூழலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது