அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்கள் செயல்திறனின் அடிப்படையில், “செயலில் திறமை தரவரிசையில் முன்னிலை” எனும் திட்டத்தில் தெளிவு செய்தித்தளம் நடாத்திய முதல் தரவரிசை (1வது அமர்வு) வெளியிடப்பட்டுள்ளது.
இந்த தரவரிசை, பிரதேச சபையின் முதல் அமர்விலிருந்து இரண்டாவது அமர்வு வரை உறுப்பினர்கள் ஆற்றிய பங்களிப்புகளை முன்னிறுத்தி தயாரிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 17 உறுப்பினர்களில் மூவர் விசேட கூட்டத்தில் கலந்து கொள்ளாத காரணத்தால் அவர்களுக்கான புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளன. ஏனைய 14 உறுப்பினர்களும் சம அளவில் புள்ளிகளைப் பெற்றுள்ளனர்.
மேலும், வரவிருக்கும் 2025 ஆகஸ்ட் 20ஆம் திகதி நடைபெறவுள்ள இரண்டாவது அமர்வுக்குப் பின்னர், புதிய தரவரிசை பட்டியல் வெளியிடப்படும்.
இந்த நடவடிக்கையின் நோக்கம், வாக்கு கேட்கும் போது மக்களின் வாசற்படியில் நிற்கும் பிரதிநிதிகள், தேர்ந்தெடுக்கப்பட்ட பின் மக்களின் தேவைகளை புறந்தள்ளாமல், ஒளியாமல் வெளிப்படையாகச் செயல்படுவதை உறுதி செய்வதே எமது தெளிவு செய்தித்தளம் ஏற்படுத்தியுள்ள இத்திட்டத்தின் நோக்கமாகும்.