பாணந்துறைப் பகுதியில் உள்ள நிதி நிறுவன கிளை அலுவலகத்தில், பெண்கள் கழிப்பறைக்குச் செல்வதை மறைமுகமாகக் காணொளி எடுத்த இளைஞர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில், குறித்த இளைஞர் காணொளி எடுப்பதை கண்டு ஒருவர் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர், சந்தேக நபரின் கையடக்கத் தொலைபேசி சோதனை செய்யப்பட்டபோது, அவர் சில காலமாகவே பெண்கள் கழிப்பறைக்குச் செல்லும் தருணங்களை பதிவு செய்து வந்தது கண்டறியப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மத்துகம, நவுத்துடுவ பகுதியைச் சேர்ந்த 26 வயதுடையவர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர் பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதோடு, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.