பெரிய கல்லாறு நியூ வளர்மதி விளையாட்டுக் கழகம் நடத்திய மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 64 அணிகள் பங்கேற்றன. பல வலுவான அணிகளை வீழ்த்தி முன்னேறிய அட்டாளைச்சேனை சோபர் அணி, நேற்று (19.08.2025)இறுதிப் போட்டியில் ரசிகர்கள் கூட்டம் குரல் கொடுத்து உற்சாகம் அளிக்க, ஆட்டம் தோறும் பரபரப்பை அதிகரிக்க மிகுந்த எதிர்பார்ப்புடன் தனது அசத்தலான ஆட்டத்தால்
நிந்தவூர் அட்வென்ஜர் அணியை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தையும் ரூ.60,000 பணப்பரிசையும் கைப்பற்றியது.
அசாதாரண பந்துவீச்சும், துல்லியமான துடுப்பாட்டமும் இணைந்ததில் சோபர் அணி கோப்பையை தன் கைகளில் உயர்த்தியது.
இந்தப் போட்டியில் சிறந்த பந்துவீச்சாளராக மிப்ரா தேர்வாகினார். இறுதிப் போட்டியின் ஆட்ட நாயகன் விருதை கே. எம். அக்ரம் வென்றார்.
வீரியமும் திறமையுனூடக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சோபர் அணிக்கு எங்கள் இதயம் கனிந்த வாழ்த்துகள்!