Top News
| இலங்கையில் சமூக ஊடகங்களுக்கு போடப்படவுள்ள மூக்கணாங்கயிறு | | தேசிய கண் வைத்தியசாலை வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு | | ஐந்து புதிய அரசியல் கட்சிகளுக்கு அனுமதி |
Jan 22, 2026

பாலமுனையின் ரத்தினமான ஜிப்ரி முதியோர் சங்க தலைவராக தெரிவு

Posted on August 21, 2025 by Admin | 230 Views

அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பாலமுனை பிரதேச முதியோர் சங்கத்தின் தலைவராக, சமூக சேவையில் பெருமை சேர்த்துள்ள அல் ஹாஜ் ஐ. பி. எம். ஜிப்ரி ஒருமனதாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

1984ஆம் ஆண்டில் பாலமுனை சமூக சேவை ஆய்வு சபையும், மரண உபகார நிதியமும் அமைத்து, சுமார் நாற்பது ஆண்டுகளாக மக்களுக்காக அயராது உழைத்து வரும் இவரின் சமூகப் பணி, உள்ளூர் மட்டத்தில் மட்டுமல்லாது பிராந்திய அளவிலும் உயர்ந்த பாராட்டைப் பெற்றுள்ளது.

மக்களின் நலனுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்து வரும் அல் ஹாஜ் ஜிப்ரி, மூத்த குடிமக்களுக்கு வலிமையும் வழிகாட்டுதலாகவும் விளங்குகிறார். இவரது புதிய பதவி, பாலமுனை பிரதேச முதியோர் சமூகத்திற்கு புதிய உற்சாகத்தையும் ஊக்கத்தையும் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமூக நலனுக்கான இவரது முக்கிய பங்களிப்புகள்

  • ஜனாஸாவுக்கான உபகரணங்கள் வழங்கல்
  • அடக்கஸ்தல துப்புரவு, ஒளியமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாடு
  • தென் கிழக்கு பிரதேசத்தின் முதலாவது ஜனாஸா வாகன சேவை அறிமுகம்
  • ஜனாஸா வீடுகளுக்கான இத்தா கொடுப்பனவு திட்டம்
  • ஜனாஸா வீடுகளுக்கான காலை உணவு திட்டம்
  • மக்களுக்காக இலவச வைத்திய முகாம்கள் ஏற்பாடு
  • மின்சாரம், நீர் இணைப்புகளை வழங்க உதவி
  • முஅத்தீன் மார்களுக்கு பெருநாள் அன்பளிப்புகள் வழங்கல்
  • முதியோர் மற்றும் வலுவிழந்தோருக்கான உதவிகள்
  • பொதுநல நிறுவனங்களுடன் இணைந்து சமூக பிரச்சினைகளைத் தீர்த்தல்

மக்களுக்காக அயராது உழைத்து வரும் அல் ஹாஜ் ஜிப்ரியின் பணிகள், பாலமுனை மக்களின் பெருமையாகக் கருதப்படுகின்றன. அவரது ஆயுள் நீடித்து, சேவை தொடர்ந்து செல்ல இறைவனின் அருளை வேண்டுகின்றோம்.