Top News
| இன்று முதல் வாகன இலக்கத் தகட்டின் இறுதி எண்ணின் அடிப்படையில் எரிபொருள் விநியோகம் | | பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்ட அட்டாளைச்சேனை அல் இபாதா கலாசார மன்றத்தின் 15வது வருட இப்தார் நிகழ்வு | | QR பதிவு சிக்கலின் தீர்வுக்கு 0760001919 எனும் வட்ஸப் இலக்கம் அறிமுகம் |
Mar 19, 2026

தபால் ஊழியர்களின் வேலைநிறுத்தம் தொடரும் நிலையில் பாராளுமன்றத்தில் அவர்களுக்காக அமைச்சரிடம் கேள்விக் கணைகளை தொடுக்கும் உதுமாலெப்பை எம்பி

Posted on August 21, 2025 by Admin | 198 Views

(அபூ உமர்)

தபால் ஊழியர்கள் மேற்கொண்டு வரும் பணிப்பகிஷ்கரிப்பு தொடரும் நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் எம். எஸ். உதுமாலெப்பை இன்று (வியாழக்கிழமை) சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் அவர்களிடம் தபால் திணைக்களம் தொடர்பான பல முக்கிய கேள்விகளை முன்வைக்க உள்ளார்.

அதில்,

  • தபால் திணைக்களத்தில் தற்போது பணியாற்றி வரும் 3,081 பதிவு செய்யப்பட்ட பதிலீட்டாளர்களின் சேவைக் கால விவரங்கள்,
  • நிலவும் பதவி வெற்றிடங்கள்,
  • பதிவு செய்யப்பட்ட பதிலீட்டாளர்களை நிரந்தர நியமனம் செய்வதற்கான நடவடிக்கைகள்,
  • இதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகள் அல்லது எடுக்கப்படாமைக்கான காரணங்கள்

தபால் ஊழியர்கள் தொடர்பான பிரச்சினைகள் நீண்டகாலமாக நிலவி வரும் நிலையில், இந்த கேள்விகள் பாராளுமன்றத்தில் முக்கியத்துவம் பெறும்.