(அபூ உமர்)
இலங்கையில் தமிழ், சிங்களம் ஆகிய இரண்டு தேசிய இனங்களே உள்ளன என்று கூறிய கருத்து பாராளுமன்றத்தில் இன்று சர்ச்சையை ஏற்படுத்தியது.
இன்று (22) சபாநாயகர் தலைமையில் நடைபெற்ற சபை ஒத்திவைப்பு விவாதத்தில் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஶ்ரீதரன் உரையாற்றுகையில் இலங்கையில் தமிழ், சிங்களம் ஆகிய இரண்டு தேசிய இனங்களே உள்ளன என்று கூறிய கருத்து பாராளுமன்றத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அவரது கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து எம்.எஸ். உதுமாலெப்பை எம்.பி. உரையாற்றுகையில்….
“இன்றைய தினம் சில பாராளுமன்ற உறுப்பினர்கள், இலங்கையில் தமிழ் மற்றும் சிங்கள ஆகிய இரு தேசிய இனங்களே உள்ளன என்று குறிப்பிட்டனர். ஆனால், முஸ்லிம் இனத்தவர்களை எவரும் நினைவுபடுத்தவில்லை,” என அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், “தமிழ் இனத்தவர்களுக்கு பிரச்சினைகள் உள்ளன என்பதை நாங்களும் எங்கள் முஸ்லிம் சமூகமும் ஏற்றுக்கொள்கிறோம். அவற்றிற்கு தீர்வுகள் வழங்கப்பட வேண்டும் என்பதில் எங்களுக்கு எந்தவித எதிர்ப்பும் இல்லை. அதேவேளை, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ், முஸ்லிம் இன மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வரும் நிலையில், இனவாத பேச்சுகளை இவ் உயரிய சபையில் கெளரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் பேசுவதை நிறுத்த வேண்டும்” என உதுமாலெப்பை எம்பி வலியுறுத்தினார்.