அக்கறைப்பற்று பிஸ்காலில் , நான்கு நாட்களுக்கு முன்பு செப்பனிடப்பட்ட தார் வீதி தற்போது பொதுமக்கள் பாவனைக்கு முற்றிலும் உகந்ததல்ல என உள்ளூர் மக்கள் கடும் விமர்சனம் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வீதியில் வாகனங்களை தரித்து வைக்கும்போதெல்லாம், தார் அடித்த அடுக்கு உடனடியாக புதைந்து கீழே செல்வதாகவும், இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமங்களை சந்திப்பதாகவும் மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
“செப்பனிடப்பட்ட நான்கு நாட்களில் வீதி இப்படியாக சேதமடைவது எத்தகைய பொறுப்பற்ற செயல்? பணியை மேற்கொண்டவர்களும், அதனை மேற்பார்வை செய்தவர்களும் நேரில் வந்து இந்த அதிசயத்தை தங்களது கண்களால் பாருங்கள்” என மக்கள் சாடுகின்றனர்.
மேலும், அரச நிதி வீணடிக்கப்பட்டு இத்தகைய தரமற்ற பணிகள் நடப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது, பொறுப்பான அதிகாரிகள் உடனடியாக விசாரணை மேற்கொண்டு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்துகின்றனர்.
உள்ளூர் மக்கள் இதை “புதையும் அதிசய தார் வீதி” என்று விமர்சனத்துடன் அழைக்கின்றனர்.