முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் இன்று (22.08.2025) கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் ஜனாதிபதியாகப் பதவி வகித்த காலப்பகுதியில் மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்கள் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக இன்று காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தார். விசாரணை நடத்திய அதிகாரிகள் அவரை கைது செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை அரசியல் வரலாற்றில், ஜனாதிபதி பதவி வகித்த ஒருவர் கைது செய்யப்படுவது இதுவே முதலாவது சம்பவமாகும்