முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கைது, சட்டம் அனைவருக்கும் சமமாக அமுல்படுத்தப்படுவதை உறுதிப்படுத்துகிறது என்று யூடியூபர் சுதத்த திலகசிறி தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி கைது செய்யப்படுவார் என்ற தகவல் பிரபஞ்சத்திலிருந்து தமக்கு கிடைத்ததாகவும், அதனை அடிப்படையாகக் கொண்டு தான் இந்த அறிவிப்பை வெளியிட்டதாகவும் அவர் கூறினார்.
இதுகுறித்து ஜனாதிபதி அனுர திசாநாயக்க எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
சுதத்த திலகசிறி தனது ஆன்லைன் சேனலில் வெளியிட்ட காணொளியில் இக்கருத்துகளை பதிவு செய்துள்ளார்