Top News
| இன்று முதல் வாகன இலக்கத் தகட்டின் இறுதி எண்ணின் அடிப்படையில் எரிபொருள் விநியோகம் | | பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்ட அட்டாளைச்சேனை அல் இபாதா கலாசார மன்றத்தின் 15வது வருட இப்தார் நிகழ்வு | | QR பதிவு சிக்கலின் தீர்வுக்கு 0760001919 எனும் வட்ஸப் இலக்கம் அறிமுகம் |
Mar 19, 2026

பெயர்ப்பட்டியலில் மோசடி செய்ததனால் அட்டாளைச்சேனை பலநோக்கு கூட்டுறவுச் சங்க இயக்குநர் சபைத் தெரிவு ஒத்திவைப்பு

Posted on August 24, 2025 by Admin | 289 Views

அட்டாளைச்சேனை பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் இயக்குநர் சபையினை தெரிவு செய்வதற்கான விசேட பொதுச் சபைக் கூட்டம் இன்று (24.08.2025) காலை 9.00 மணிக்கு சங்கத் தலைமைக் காரியாலயக் கூட்ட மண்டபத்தில் தலைவர் எம்.ஜே.எம். பைறூஸ் தலைமையில் கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளரின் பங்கேற்புடன் நடைபெற்றது.

இவ்வேளையில் தலைவர் எம்.ஜே.எம். பைறூஸ் அவர்கள் உரையாற்றியதைத் தொடர்ந்து, இயக்குநர் சபைத் தெரிவுக்கான அங்கத்துவப் பெயர்ப்பட்டியலில் மாற்றம் செய்து மோசடி இடம்பெற்றுள்ளதாக குழுவின் செயலாளர் ஒருவர் ஆட்சேபனை முன்வைத்தார்.

இதையடுத்து குறித்த குற்றச்சாட்டை விசாரணை செய்த பிறகே தெரிவுக்கான விசேட பொதுச் சபைக் கூட்டத்தின் புதிய திகதி அறிவிக்கப்படும் என கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் அறிவித்தார்