அட்டாளைச்சேனை சோபர் விளையாட்டு கழகம், “REAL METRIXX MEGA NIGHT 2025” மாபெரும் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தையும், 70,000 ரூபாய் பணப்பரிசையும் கைப்பற்றியது.
Dheen Hypermarket Pvt Ltd அனுசரணையில் நடைபெற்ற இச் சுற்றுப் போட்டியில், பிராந்தியத்தைச் சேர்ந்த 48 அணிகள் பங்கேற்றன. அதில் வித்தியாசமான திறமையையும், விளையாட்டு உணர்வையும் வெளிப்படுத்திய சோபர் அணி இறுதியில் வெற்றி கிண்ணத்தை உயர்த்தியது.
இறுதிப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தால் ரசிகர்களின் பாராட்டைப் பெற்ற கே. எம். அக்ரம், “சிறந்த ஆட்டக்காரராக” (Best Player)தெரிவானார்.
அட்டாளைச்சேனை சோபர் அணியின் இந்த வெற்றி, வெறும் ஒரு விளையாட்டு சாதனை மட்டுமல்ல. இது ஒற்றுமை, உழைப்பு, ஒழுக்கம் ஆகியவை இணைந்தால் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்பதற்கான சான்றாகும்.
தொடர்ச்சியாக பல போட்டிகளில் சாம்பியன் பட்டங்களை வென்றுவரும் இந்த அணி, இளம் தலைமுறைக்கு விளையாட்டு என்பது வெற்றியை மட்டுமல்ல, ஆரோக்கியம், நட்பு, சமூக ஒற்றுமை ஆகியவற்றின் சின்னம் என்பதை நினைவூட்டுகிறது. சோபர் அணியின் சாதனை பிராந்திய இளைஞர்களுக்கு ஊக்கமாக அமைந்துள்ளது.
இறுதி நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எஸ்.எம்.உவைஸ், பிரதேச சபை உறுப்பினர் ஏ.எல்.பாயிஸ் மற்றும் ஏ.எம்.அர்பான் பல முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டு வெற்றிக் கிண்ணத்தினை வழங்கி வைத்தனர்.