Top News
| இலங்கையில் சமூக ஊடகங்களுக்கு போடப்படவுள்ள மூக்கணாங்கயிறு | | தேசிய கண் வைத்தியசாலை வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு | | ஐந்து புதிய அரசியல் கட்சிகளுக்கு அனுமதி |
Jan 22, 2026

தபால் தொழிற்சங்கங்கள் முன்னெடுத்த பணிப்புறக்கணிப்பு நிறைவடைந்தது

Posted on August 24, 2025 by Admin | 210 Views

தபால் தொழிற்சங்கத்தினர் முன்னெடுத்த பணிப்புறக்கணிப்பு நிறைவடைந்துள்ளது.

அமைச்சருடன் நடந்த கலந்துரையாடலின் பின்னர் ஏற்பட்ட இணக்கப்பாடுகளை கருத்தில் கொண்டு, இதுவரை நடைபெற்று வந்த பணிப்புறக்கணிப்பு நிறைவடைந்ததாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியின் இணைப்பாளர் சிந்தக்க பண்டார தெரிவித்தார்.

17 ஆம் திகதி முதல் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் மற்றும் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கங்கள் உட்பட பல தொழிற்சங்கங்கள் 19 கோரிக்கைகளை முன்வைத்து பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்திருந்தன.

இந்த பணிப்புறக்கணிப்பின் காரணமாக, நாடு முழுவதும் உள்ள தபால் நிலையங்களின் சேவைகள் பாதிக்கப்பட்டு, இலட்சக்கணக்கான கடிதங்கள் தேங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.