அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தேர்தலில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் தெரிவு செய்யப்பட்ட தவிசாளரும் உறுப்பினர்களும் கௌரவிக்கப்படவுள்ள நிகழ்வை முன்னிட்டு கலந்துரையாடல் ஒன்று இன்று (25.08.2025) அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை அவர்களின் மக்கள் பணிமனையில் நடைபெற்றது.
அல்ஹாஜ் யு.எல். சம்சுதீன் (Rtd.Ds.SLTB) தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் நிகழ்வினை சிறப்பாக நடத்துவது தொடர்பான பல்வேறு அம்சங்கள் ஆராயப்பட்டன.
அத்துடன், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஸ்தாபக தலைவரும் முன்னாள் அமைச்சருமான மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் 25வது நினைவேந்தல் தினம் வருகிற செப்டம்பர் 16ஆம் திகதி காலை 6.00 மணி முதல் 7.00 மணி வரை அட்டாளைச்சேனையிலும், அதே நாளில் மாலை நிந்தவூரில் நடைபெறும் நினைவேந்தலிலும் கலந்து கொள்வது தொடர்பாகவும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை, கட்சியின் பிரதித் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூர், உயர் பீட உறுப்பினர் மற்றும் அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் ஏ.எஸ்.எம். உவைஸ், அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்களான ஏ.சி.நியாஸ் எஸ்.எம். றியாஸ், ஐ.எல். அஸ்வர், ஏ.எல். பாயிஸ் கட்சியின் முக்கியஸ்தர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.