Top News
| 50 வருடங்களில் முதல்முறையாக தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்வு | | நாட்டின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை , மின்னல் ,கடும் காற்றுக்கான ஆபத்து | | அட்டாளைச்சேனை பிரதேச சபையில் சில உறுப்பினர்களின் செயலற்ற தன்மை குறித்து மக்கள் மத்தியில் அதிருப்தி |
Oct 7, 2025

நாடு தழுவிய வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது 

Posted on August 25, 2025 by Admin | 108 Views

இன்று (25) காலை 8.00 மணிமுதல் நாடு தழுவிய அளவில் முன்னெடுக்கப்படவிருந்த பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கைவிட்டதாக அறிவித்துள்ளது.

சுகாதார அமைச்சருடன் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் வழங்கப்பட்ட எழுத்து மூல உறுதிப்படுத்தலை அடுத்து, திட்டமிடப்பட்ட தொழிற்சங்க போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்த தீர்மானித்துள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, வைத்தியர்கள் இடமாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முழு நாட்டிலும் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க அரச வைத்தியர்கள் சங்கம் திட்டமிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது