கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை, பிரதமர் ஹரிணி அமரசூரியா நேற்று (24) அதிகாலை சந்தித்தார் என சில ஊடகங்களில் வெளியான செய்திகளை, பிரதமர் அலுவலகம் அதிகாரப்பூர்வமாக மறுத்துள்ளது.
“ஹிரு நியூஸ்” வெளியிட்டிருந்த தகவல் உண்மைக்கு புறம்பானது என்று அலுவலகம் வெளியிட்ட விளக்க அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அறிக்கையில் மேலும், “பிரதமர் ஹரிணி அமரசூரியா மருத்துவமனைக்கு சென்று முன்னாள் ஜனாதிபதியை சந்தித்தார் என்ற செய்தி முழுவதும் தவறானது என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.