ரணில் விக்ரமசிங்க வெளிநாட்டுப் பயணங்களின் போது அரச நிதி தவறாக பயன்படுத்தப்பட்டமை நிரூபிக்கப்பட்டதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இது ரணிலுக்கு மட்டும் அல்லாமல் விரைவில் ராஜபக்ஷ குடும்பத்தினருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
இன்று (திங்கட்கிழமை) கொழும்பில் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்தபோது, “அரச உத்தியோகத்தர்களுக்கு பொருந்தும் சட்டமே ஜனாதிபதிகளுக்கும் பொருந்தும்; அவர்களுக்கென தனி சட்டம் இல்லை. அதன்படி தான் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன” என்று அவர் வலியுறுத்தினார்.
மேலும் மத்திய வங்கியில் இடம்பெற்ற மோசடி தொடர்பாக விரைவில் விசாரணை தொடங்கப்படும் என்றும், அலோசியஸிடம் இருந்து பணம் பெற்றவர்களுக்கும் விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
“மக்கள் நமக்கு வழங்கியுள்ள ஆணையில், இது மிக முக்கியமான விடயம். அதை நிறைவேற்றுவதே எங்கள் கடமை,” என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.