கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பிணையில் செல்ல அனுமதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன்படி, அவரை தலா ரூ. 5 மில்லியன் பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளில் விடுதலை செய்ய நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
குற்றப்புலனாய்வுத் திணைக்களமும், பிரதிவாதிகள் தரப்பு வழக்கறிஞர்களும் முன்வைத்த சமர்ப்பணங்களை பரிசீலித்ததன் பின்னர், நீதவான் நிலுபுலி லங்காபுர இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
சமர்ப்பிக்கப்பட்ட மருத்துவ அறிக்கைகளையும் ஆய்வு செய்ததன் அடிப்படையில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது