(அபூ உமர்)
அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஒலுவில் அமைந்துள்ள காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் நிலப்பகுதியை பொதுமக்கள் பயன்பாட்டிற்கான விளையாட்டு மைதானமாக மாற்றுவதற்கு காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.கே. நிஹால் தனது அனுமதியை வழங்கியுள்ளார்.
இந்த உத்தியோகபூர்வ அறிவிப்பு, அட்டாளைச்சேனை பிரதேச செயலாளருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில், அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.கே. நிஹாலை சந்தித்து ஒலுவில் பொது விளையாட்டு மைதானத்திற்கான நிலப்பகுதியை ஒதுக்கிட வேண்டுமென கோரிக்கை வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.