(தெளிவு செய்தியாளர்)
அட்டாளைச்சேனை தேசிய கல்விக்கல்லூரியின் பீடாதிபதி எம். சீ. ஜூனைட் அவர்களுக்கும் அட்டாளைச்சேனை பிரதேச கல்வி அபிவிருத்தி சபையின் உறுப்பினர்களுக்குமிடையிலான சிறப்பு சந்திப்பு இன்றைய தினம் (29) இடம்பெற்றது.
இச் சந்திப்பில், அட்டாளைச்சேனைப் பிரதேச பாடசாலைகளுக்கு தொடருறு கல்வி ஆசிரிய பயிலுநர்களை நியமிப்பது குறித்தும், பிரதேச கல்வி முன்னேற்ற நடவடிக்கைகள் தொடர்பாகவும் விரிவான கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன.
இந்த நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் கெளரவ தவிசாளர் ஏ. எஸ். எம். உவைஸ், முன்னாள் உதவிக் கல்விப் பணிப்பாளர் என். சம்சுத்தீன், ஆசிரிய ஆலோசகர்கள் மௌலவி என். ஆர். நஸீர், மௌலவி எம். ஐ. சப்றி, முன்னாள் அதிபர் எம். ஏ. அன்சார், ஊடகவியலாளர் எம். ஜே. எம். சஜீத் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.