Top News
| 50 வருடங்களில் முதல்முறையாக தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்வு | | நாட்டின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை , மின்னல் ,கடும் காற்றுக்கான ஆபத்து | | அட்டாளைச்சேனை பிரதேச சபையில் சில உறுப்பினர்களின் செயலற்ற தன்மை குறித்து மக்கள் மத்தியில் அதிருப்தி |
Oct 6, 2025

அட்டாளைச்சேனையில் ஜொலித்த Arafian லெஜன்ட் அணியின் ஜேர்ஸி அறிமுக விழா

Posted on August 29, 2025 by Admin | 173 Views

(தெளிவு செய்தியாளர்)

அட்டாளைச்சேனையை மையமாகக் கொண்டு நடைபெறவுள்ள லெஜன்ட் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் அணிகளில் ஒன்றான Arafian லெஜன்ட் அணி தனது அதிகாரப்பூர்வ ஜேர்ஸியை நேற்று இரவு அறபா வித்தியாலய அரங்கில் விமர்சையாக அறிமுகப்படுத்தியது.

ASM Distributer நிறுவனத்தின் பணிப்பாளரும் அணியின் உரிமையாளருமான அஜ்மீர் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக அணியின் வீரரும் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளருமான அப்கர் கலந்து கொண்டதுடன் ஓய்வு பெற்ற மாவட்ட விளையாட்டு பயிற்றுவிப்பாளர் எஸ்.எல்.தாஜூதீன், ஏ.எல்.பாயிஸ்(MPS), ஹாறூன், ஹம்சார் உள்ளிட்ட பலர் சிறப்பதிதிகளாக கலந்துகொண்டு வீரர்களுக்கு ஜேர்ஸி வழங்கி கௌரவித்தனர்.

அணியின் தலைவராக மூத்த ஆசிரியரும் சிறந்த ஆல்-ரவுண்டருமான ஜே. பஸ்மீர் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், கல்வியியல் கல்லூரி விரிவுரையாளர் எம்.எம். அஸ்மி உதவி தலைவராக பொறுப்பேற்றுள்ளார்.

பிரதேசம் முழுவதும் எதிர்பார்க்கப்படும் லெஜன்ட் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடர் இன்று மாலை 4.00 மணிக்கு அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை முன்பிலிருந்து நடைபவணியுடன் துவங்கி அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில் துவக்கப் போட்டியுடன் ஆரம்பிக்கப்படவுள்ளது.

துவக்க விழாவின் பிரதம அதிதியாக அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை பங்கேற்கவுள்ளதுடன் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எஸ்எம்.உவைஸ மற்றும் பல்வேறு சிறப்பதிதிகளின் பங்கேற்பும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

பல்துறை திறமைகள் கொண்ட வீரர்கள் இணைந்திருப்பதால் Arafian லெஜன்ட் அணி ஒரு வலுவான அணியாகக் கருதப்படுகிறது. சாம்பியன் கிண்ணத்தைக் கைப்பற்றக்கூடிய அணிகளில் இதுவும் ஒன்றாக ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.