Top News
| ஒவ்வொரு புதன்கிழமையும் அரச விடுமுறை -அரசின் அதிரடி அறிவிப்பு | | QR முறைமை அறிமுகப்படுத்தப்பட்டமைக்கான உண்மையான காரணம் | | இன்று முதல் QR இல்லாமல் எரிபொருள் இல்லை |
Mar 18, 2026

அதுரலியே ரதன தேரர் செப்டம்பர் 12 வரை விளக்கமறியலில்

Posted on August 29, 2025 by Admin | 304 Views

நுகேகொடை நீதிமன்றத்தில் இன்று (29) பிற்பகல் ஆஜரான வணக்கத்திற்குரிய அதுரலியே ரதன தேரர், எதிர்வரும் செப்டம்பர் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

முன்னதாக, 2025 ஆகஸ்ட் 18 ஆம் திகதி, கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவின் (CCD) கோரிக்கையை அடுத்து, கொழும்பு நீதவான் நீதிமன்றம் ரதன தேரருக்கு பிடியாணை பிறப்பித்திருந்தது.

இந்த வழக்கு தொடர்பான குற்றச்சாட்டுகளின்படி, 2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது ‘அபே ஜன பல’ கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற ஆசனத்தைப் பெறுவதற்காக, கட்சியின் பொதுச் செயலாளரான வண. வேதினிகம விமலதிஸ்ஸ தேரர் கடத்தப்பட்டு, அச்சுறுத்தப்பட்டு, அவரது கையொப்பம் பலவந்தமாகப் பெறப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சம்பவத்தினால் தான் அதுரலியே ரதன தேரருக்கு ஆசனம் கிடைக்க வழிவகுத்ததாக சந்தேகிக்கப்படுவதாக விசாரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.