தொழில் கோரும் பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்ளும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகக் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அமைச்சு வெளியிட்ட அறிக்கையில், இதற்கான போட்டிப் பரீட்சை உரிய காலப்பகுதியில் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதனுடன் தொடர்புடைய வழக்கின் விசாரணை தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால், விசாரணைகள் நிறைவடைந்த பின்னர் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொழில்கோரும் பட்டதாரிகளின் ஒன்றிணைந்த சங்க பிரதிநிதிகள், பிரதமர் ஹரினி அமரசூரியவுடன் சந்தித்து கலந்துரையாடியபோது, இந்த விஷயம் குறித்து விரிவாக பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.
இந்தநிலையில், தொழில்கோரும் பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைக்கும் போது விண்ணப்பதாரர்களின் வயதெல்லையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, வயதெல்லை நீடிக்கப்பட்டு, தற்போது ஆசிரியர் சேவையில் காணப்படும் அனைத்து வெற்றிடங்களும் நிரப்பப்பட உள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.