அட்டாளைச்சேனையில் அனைவராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் லெஜன்ட் பிரிமியர் லீக் கிரிக்கெட் சுற்றுத் தொடரை முன்னிட்டு GTC லெஜன்ட் அணியின் ஜேர்சி அறிமுக விழா நேற்று இரவு அட்டாளைச்சேனை லியாடி விடுதியில் நடைபெற்றது.
இந்நிகழ்வு அணியின் தலைவரும் உரிமையாளரும் மற்றும் People Connect நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளருமான எம்.ஏ. றிழா அவர்களின் தலைமையில் சிறப்பாக நடத்தப்பட்டது.
நிகழ்வில், அணியின் அனைத்து வீரர்களுக்கும் புதிய ஜேர்சியை அணிவித்த உற்சாகமும் பெருமிதமும் கலந்த அந்த தருணம், ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியது.
லெஜன்ட் பிரிமியர் லீக் உத்தியோகபூர்வமாக இன்று வெள்ளிக்கிழமை (மாலை 5.00 மணி) அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில் துவங்கவுள்ளது.
பல்வேறு அனுபவமிக்க வீரர்களை கொண்டிருக்கும் GTC லெஜன்ட் அணியானது வலுவான அணிகளில் ஒன்றாகக் கருதப்படுவதுடன், இந்த முறையில் சம்பியன் கோப்பையை கைப்பற்றும் வல்லமை கொண்டதாக ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.