கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இன்று (29) வைத்தியசாலையில் இருந்து வெளியேறினார்.
இன்றைய காலை அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, மருத்துவர்களின் பரிந்துரையின்படி வீட்டிற்கு திரும்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், மருத்துவ ஆலோசனையின்படி அவர் அடுத்த சில நாட்கள் வீட்டிலேயே ஓய்வு எடுக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
மேலும், வீட்டில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் அவரது உடல்நிலையை குடும்ப வைத்தியர்கள் தொடர்ந்து கண்காணிப்பார்கள் என்றும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.