பொத்துவில் – கோமாரி பிரதேசத்தில் இன்று (30) நிகழ்ந்த துயர சம்பவம் மக்கள் மனதை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
வெலிமடையைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சார்ந்த சுமார் 52 பேர் சுற்றுலா பயணமாக பேருந்தில் புறப்பட்டிருந்தனர். அவர்கள் அம்பாறை தீகவாபி ராஜமாக விகாரையில் சமய வழிபாடுகளை முடித்து, அறுகம்பை நோக்கி சென்றுகொண்டிருந்த வேளையில், கோமாரி பகுதியில் பேருந்து திடீரென வீதியை விட்டு விலகி அருகிலிருந்த கால்வாயில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் பலர் கடுமையாக காயமடைந்துள்ளனர். உடனடியாக பொத்துவில் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு மற்றும் அம்பாறை வைத்தியசாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
சாரதியின் தூக்கக் கலக்கமே இந்த விபத்துக்கு காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
அன்பும் உறவும் பிணைப்பும் நிறைந்த ஒரு குடும்பம் மகிழ்ச்சியான தருணங்களை அனுபவிக்கச் சென்றபோது ஏற்பட்ட இந்த விபத்து, மக்களடத்தில் துயரச் சாயலை ஏற்படுத்தியுள்ளது