(சரப்)
நிந்தவூர் ஜம்இய்யத்துல் உலமா கிளையின் ஏற்பாட்டில், நிந்தவூரின் ஆன்மீக மற்றும் கலாசார பாரம்பரியங்களை பாதுகாக்கும் நோக்கில் சிறப்பு கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் M.A.M. தாஹிர், கௌரவ பிரதேச சபை தவிசாளர் A. அஸ்பர் JP, ஜும்ஆப் பள்ளிவாயல் தலைவர் ஜௌபர் SSP, நிந்தவூர் ஜம்இய்யத்துல் உலமா தலைவர் மௌலவி M.I. ஜஃபர் (பலாஹி) உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
நிந்தவூரின் ஆன்மீகம் மற்றும் கலாசார அடையாளங்களை பாதுகாப்பது அவசியம் என்பதில் அனைவரும் ஒருமித்த கருத்தை வெளிப்படுத்தினர். இதற்காக, ஜும்ஆப் பள்ளிவாயல் தலைமையில் அனைத்து சமூகத்தினரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டது