அருகம்பே பகுதியில் ஹோட்டல் உரிமையாளர் மற்றும் அவரது மனைவியை தாக்கியதாகக் கூறப்படும் இரண்டு இஸ்ரேலிய நாட்டவர்கள் பொத்துவில் பொலிஸாரால் கடந்த வெள்ளிக்கிழமை (29) கைது செய்யப்பட்டனர்.
பொலிஸ் தகவலின்படி, தாக்குதலில் காயமடைந்த தம்பதியினர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் 26 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம், இஸ்ரேலியர்கள் பயணித்த வாகனம் வீதியை அடைந்து, ஹோட்டல் உரிமையாளர் மற்றும் அவரது மனைவி பயணித்த வாகனத்திற்கு இடையூறு ஏற்பட்டதால் ஆரம்பத்தில் ஏற்பட்ட வாக்குவாதம் கடுமையான மோதலாக மாறி தாக்குதலில் முடிந்தது என விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர்கள் இருவரும் விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்