Top News
| உயர்த்தப்பட்ட சம்பளம் ஆசிரியர்களின் வங்கி கணக்குகளில் இன்று வரவு | | குளிர் வானிலை காரணமாக வைரஸ் நோய்கள் பரவல் | | நாளை நடைபெறவுள்ள அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 7வது அமர்வு |
Jan 21, 2026

முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகர் அஷ்ரஃப் அவர்களின் 25வது நினைவேந்தல் சிறப்பு நிகழ்வு நிந்தவூரில்

Posted on August 31, 2025 by Admin | 197 Views

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரஃப் அவர்களின் 25வது நினைவேந்தல் தினத்தை முன்னிட்டு நடைபெறவுள்ள நிகழ்வுகள் தொடர்பான கலந்துரையாடல் கட்சியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம். நிசாம் காரியப்பர் தலைமையில் கட்சியின் தேசிய பொருளாளர் ரஹ்மத் மன்சூர் அவர்களின் கல்முனை அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்தக் கலந்துரையாடலில் கட்சியின் பிரதித் தேசிய அமைப்பாளரும், அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ். உதுமாலெப்பை, பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். அப்துல் வாசித், கட்சியின் பிரதித் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூர், கட்சியின் உதவிச் செயலாளர் மன்சூர் ஏ காதர், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல். தவம் (MMC), கட்சியின் சூறா சபை செயலாளர் அல்ஹாஜ் யூ.எம். வாஹிட் (Rtd. ADE), கட்சியின் அம்பாறை மாவட்ட செயலாளர் ஏ.சி. சமால்தீன், உயர்பீட உறுப்பினர் சப்ராஸ், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ஏ.எஸ்.எம். உவைஸ், இறக்காம பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் எம். முஸ்மி, பொத்துவில் பிரதேச சபையின் பிரதித் தவிசாளர் ஏ. மாபிர், மற்றும் கட்சி முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

நினைவேந்தல் நிகழ்வு வரும் செப்டம்பர் 16, 2025 அன்று மாலை 4.00 மணிக்கு நிந்தவூர் அல்-அஸ்றக் மகா வித்தியாலயத்தில் நடைபெற உள்ளது. இதில் பெருந்தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரஃப் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வும், மறைந்த கட்சியின் தவிசாளரும் முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினருமான ஏ.எல்.எம். அப்துல் மஜீத் எழுதிய புத்தகத்தின் வெளியீடும் இடம்பெறவுள்ளது.