Top News
| 50 வருடங்களில் முதல்முறையாக தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்வு | | நாட்டின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை , மின்னல் ,கடும் காற்றுக்கான ஆபத்து | | அட்டாளைச்சேனை பிரதேச சபையில் சில உறுப்பினர்களின் செயலற்ற தன்மை குறித்து மக்கள் மத்தியில் அதிருப்தி |
Oct 6, 2025

அதிவேக நெடுஞ்சாலையில் இன்று முதல் நடைமுறையாகும் புதிய சட்டம்

Posted on September 1, 2025 by Admin | 119 Views

அதிவேக நெடுஞ்சாலையில் பயணம் செய்யும் அனைத்து வாகனங்களில் உள்ள பயணிகளும் இன்று (செப்டம்பர் 1) முதல் ஆசனப்பட்டி அணிவது கட்டாயமாகும்.

இந்த விதிமுறைக்கு முரணாக செயல்படும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் மஞ்சுள குலரத்னா தெரிவித்தார்.

அதே நேரத்தில், ஆசனப்பட்டி வசதி இல்லாத சில வாகனங்களில் அவை பொருத்துவதற்கு மூன்று மாத கால அவகாசம் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்