Top News
| ஒவ்வொரு புதன்கிழமையும் அரச விடுமுறை -அரசின் அதிரடி அறிவிப்பு | | QR முறைமை அறிமுகப்படுத்தப்பட்டமைக்கான உண்மையான காரணம் | | இன்று முதல் QR இல்லாமல் எரிபொருள் இல்லை |
Mar 18, 2026

ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்களுக்கு விதித்த தடையை நீக்கும் ஐக்கிய தேசியக் கட்சி

Posted on September 1, 2025 by Admin | 220 Views

ஐக்கிய தேசியக் கட்சியால் (ஐ.தே.க.) இடைநீக்கம் செய்யப்பட்டு தற்போது ஐக்கிய மக்கள் சக்தியில் (ஐ.ம.ச.) இணைந்துள்ள உறுப்பினர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்சித் தடையை நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வரும் செப்டம்பர் 6ஆம் திகதி கொழும்பு கண்காட்சி மற்றும் மாநாட்டு மையத்தில் நடைபெறவுள்ள ஐ.தே.க. தேசிய மாநாட்டில் முன்னாள் ஜனாதிபதிகள், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உட்பட பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கட்சித் தரப்புகள் தெரிவித்துள்ளன.

மாநாட்டில், கட்சித் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்க சிறப்பு உரையாற்றவுள்ளார்.

இதேவேளை, கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று எதிர்க்கட்சிகளின் செயலாளர்கள் பங்கேற்ற முக்கிய கூட்டம் ஒன்றும் நடைபெற்றது.