Top News
| உயர்த்தப்பட்ட சம்பளம் ஆசிரியர்களின் வங்கி கணக்குகளில் இன்று வரவு | | குளிர் வானிலை காரணமாக வைரஸ் நோய்கள் பரவல் | | நாளை நடைபெறவுள்ள அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 7வது அமர்வு |
Jan 21, 2026

ராஜபக்ஷவுக்கு 400 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட வேண்டும் – சரத் பொன்சேகா

Posted on September 2, 2025 by Admin | 217 Views

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு 400 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட வேண்டும் என முன்னாள் இராணுவத் தளபதி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

ஒரு நிகழ்வில் உரையாற்றிய அவர், 2010ஆம் ஆண்டு ராஜபக்ஷ ஆட்சிக் காலத்திலேயே பெரும் அளவில் ஊழல்கள் இடம்பெற்றதாக குற்றம் சாட்டினார்.

இலங்கையின் அடுத்தடுத்து வந்த தலைவர்களுக்கும் தேசிய வளர்ச்சிக்கான தெளிவான தொலைநோக்கு இல்லை என்றும் அவர் விமர்சித்தார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நடவடிக்கைகளையும் சாடிய அவர், தமது கைது விவகாரத்தில் நடப்பு அரசாங்கம் அமைத்த முன்னுதாரணத்தை ஏற்றுக்கொள்வதாக குறிப்பிட்டார்.

அந்த முன்னுதாரணத்தின் அடிப்படையில், “ராஜபக்ஷ போன்றவர்களுக்கு குறைந்தது 400 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட வேண்டும்” என அவர் வலியுறுத்தினார்.