மாளிகாவத்தை ஜும்மா சந்தி பகுதியில் இன்று (03) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டின் சிசிடிவி காட்சிகள் ஊடகங்களுக்கு வெளியாகியுள்ளன.
T-56 துப்பாக்கி பயன்படுத்தப்பட்ட இந்தத் தாக்குதலில், காயமடைந்த ஒருவரை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இரு அடையாளம் தெரியாத நபர்கள், கார் உதிரி பாகங்கள் விற்பனை செய்து கொண்டிருந்த ஒருவரை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தையடுத்து மாளிகாவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக, இந்த ஆண்டில் இதுவரை 93 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில், 49 பேர் உயிரிழந்தும் 54 பேர் காயமடைந்தும் உள்ளனர்