இரத்தினபுரி – பேருந்தில் பயணித்த பெண் மருத்துவர் ஒருவர் பேருந்திலிருந்து தூக்கி வீசப்பட்டதில், பலத்த காயங்களால் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் இரத்தினபுரியைச் சேர்ந்த 32 வயதான மதுபாஷினி என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் ஒரு குழந்தையின் தாய் ஆவார்.
பெல்மடுல்லா சென்றடைந்த பேருந்திலிருந்து இறங்குவதற்காக முன் கதவுக்கு வந்தபோது இந்த விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த மாதம் 19 ஆம் திகதி பிற்பகலில் நிகழ்ந்த இந்த விபத்திற்குப் பிறகு, மருத்துவர் மதுபாஷினி 13 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும், காயங்களைத் தாங்க முடியாமல் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
விபத்து தொடர்பில் பேருந்து ஓட்டுநரும் நடத்துனரும் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.