கிழக்கு மாகாண கல்வித்திணைக்களம் ஏற்பாடு செய்த மாகாண பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டியில் அட்டாளைச்சேனை அந்-நூர் மகா வித்தியாலயம் புதிய பெருமையைப் பெற்றுள்ளது.
மட்டக்களப்பு வெபர் விளையாட்டரங்கில் நடைபெற்று வரும் இப்போட்டியில் அக்கரைப்பற்று கல்வி வலயத்தை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொண்ட ஆர். முஹம்மட் ஆதிக் (அந்-நூர் மகா வித்தியாலயம்) 12 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான நீளம் பாய்தல் போட்டியில் பங்கேற்று 4.72 மீற்றர் தூரம் பாய்ந்து முதலிடத்தை வென்றார்.
இச் சாதனை அவரது பாடசாலைக்கும் அக்கறைப்பற்று கல்வி வலயத்துக்கும் பெருமை சேர்த்துள்ளது. மாணவனின் வெற்றிக்குப் பின்னால் அர்ப்பணிப்புடன் உழைத்த உடற்கல்வி ஆசிரியர் ஆர். ஹாறூன், பயிற்றுவிப்பாளர் றிஸ்வான் மற்றும் பாடசாலை அதிபர் ஏ.எல். அஸ்மி ஆகியோரின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.
முஹம்மட் ஆதிக் பெற்ற இவ்வெற்றியானது பாடசாலை சமூகத்தினரால் பாராட்டப்பட்டதுடன் எதிர்காலத்தில் மேலும் பல விளையாட்டு சாதனைகளுக்கான ஊக்கமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.