மட்டக்களப்பு வெபர் விளையாட்டரங்கில் நடைபெற்ற கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான மாகாண மட்ட விளையாட்டுப் போட்டியில் அட்டாளைச்சேனை அந்-நூர் மகா வித்தியாலயம் சிறப்பான வெற்றியை மீண்டும் பெற்றுள்ளது.
அக்கரைப்பற்று கல்வி வலயம் சார்பில் போட்டியில் கலந்துகொண்ட அந்-நூர் வித்தியாலய மாணவர்கள், 12 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 4×50 மீட்டர் அஞ்சலோட்டப் போட்டியில் முதலிடத்தைப் பிடித்து தங்கப்பதக்கத்தை வென்றனர்.
இந்த வெற்றி பாடசாலைக்கு பெருமையைத் தந்ததோடு, மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வரும் பாடசாலை சமூகத்தினர், அவர்களின் பயிற்சியில் உழைத்த உடற்கல்வி ஆசிரியர் ஆர். ஹாறூன், பயிற்றுவிப்பாளர் றிஸ்வான் மற்றும் அதிபர் ஏ. எல். அஸ்மி ஆகியோருக்கும் நன்றியைத் தெரிவித்துள்ளனர்.