நாட்டின் விதிமுறைகளை பின்பற்றாத 26 சமூக ஊடக தளங்களுக்கு நேபாள அரசு தடை விதித்துள்ளது.
தடை செய்யப்பட்ட தளங்களில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்) உள்ளிட்ட முக்கிய சமூக ஊடகங்களும் அடங்குகின்றன.
அந்நாட்டு தகவலின்படி, இந்தத் தடை இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும்.
நேபாள அரசு, இணைய பாதுகாப்பு மற்றும் சமூக கட்டுப்பாட்டை வலுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.