(பாலமுனை செய்தியாளர்)
மட்டக்களப்பு வெபர் விளையாட்டரங்கில் நடைபெற்று வரும் கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான மாகாண மட்ட விளையாட்டுப் போட்டியில் பாலமுனையைச் சேர்ந்த மாணவன் எம்.எச்.எம். ஹம்தான் சிறப்பான சாதனையைப் பதிவு செய்துள்ளார்.
பாலமுனை மின்ஹாஜ் மகா வித்தியாலயத்தின் கணிதப் பிரிவில் கல்வி பயிலும் ஹம்தான், ஆண்கள் 20 வயதுக்குட்பட்ட பிரிவின் பரிதிவட்டம் வீச்சுப் போட்டியில் 39.19 மீட்டர் வீசி இரண்டாம் இடத்தைப் பெற்றார். இந்த வெற்றியின் மூலம் அவர் தனது பாடசாலைக்கு பெருமையைச் சேர்த்துள்ளார்.
மாணவர் ஹம்தானின் வெற்றிக்காக பாடசாலை அதிபர் கே. உபைதுல்லாஹ், ஆசிரியர் எம். பாயிஸ், வலயத் தலைவர் நூர் முஹம்மத், பயிற்றுவிப்பாளர்கள் ஏ.எம்.எம். இர்ஷாத் மற்றும் ஜே. சபான் ஆகியோர் பெருமிதம் தெரிவித்துள்ளனர். அதேவேளை, மாணவரின் பெற்றோரும் பாடசாலை சமூகத்தினரும் அவரை வாழ்த்தியுள்ளனர்.
எமது செய்தித் தளமும் அவரை வாழ்த்துவதில் பெருமகிழ்ச்சி அடைகிறது.