Top News
| 50 வருடங்களில் முதல்முறையாக தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்வு | | நாட்டின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை , மின்னல் ,கடும் காற்றுக்கான ஆபத்து | | அட்டாளைச்சேனை பிரதேச சபையில் சில உறுப்பினர்களின் செயலற்ற தன்மை குறித்து மக்கள் மத்தியில் அதிருப்தி |
Oct 6, 2025

இலங்கை மின்சார சபையை நான்கு பகுதிகளாகப் பிரிக்கும் திட்டத்திற்கு தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு

Posted on September 6, 2025 by Admin | 109 Views

இலங்கை மின்சார சபையை நான்கு பகுதிகளாகப் பிரிப்பதற்கான அரசின் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, மின்சார சபை ஊழியர்கள் முன்னெடுத்துள்ள “சட்டப்படி வேலை செய்யும்” தொழிற்சங்க நடவடிக்கை இன்று (06) இரண்டாவது நாளாகவும் நீடிக்கிறது.

இந்நிலையில், எந்த ஊழியரும் தன்னார்வ ஓய்வு திட்டத்தில் இணங்கவில்லை என மின்சார சபை தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கத் தலைவர் கோசல அபேசிங்க தெரிவித்தார்.

“முதற்கட்டமாக, எங்கள் தொழிற்சங்க நடவடிக்கை செப்டம்பர் 15 ஆம் திகதி நள்ளிரவு வரை தொடரும். மின்சார சபை மறுசீரமைப்பில் தற்போதைய அரசாங்கம் மேற்கொள்ளும் பொறுப்பற்ற நடவடிக்கைகளே இதற்குக் காரணம். நேற்று அமைச்சருடன் இவை பற்றி கலந்துரையாடினோம் ஆனால் திருப்திகரமான பதில் எதுவும் கிடைக்கவில்லை,” என அவர் குறிப்பிட்டார்