நேபாளத்தில் சுமார் 26 சமூக ஊடகங்களைத் தடை செய்த அரசின் நடவடிக்கைக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் குறிப்பாக இளைஞர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் தலைநகர் காத்மாண்டுவில் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டக்காரர்கள் நேபாள நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டதால் நகரம் முழுவதும் பதற்றம் நிலவுகிறது.
இந்த சூழ்நிலையில், காவல்துறையினர் போராட்டக்காரர்களை கலைக்க துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், அதில் குறைந்தது 14 பேர் உயிரிழந்துள்ளதாக நேபாள ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.