காசாவில் நடைபெற்று வரும் இராணுவ தாக்குதல்களுக்கு எதிராக, இஸ்ரேல் மீது அழுத்தம் கொடுக்க ஸ்பெயின் புதிய நடவடிக்கை எடுத்துள்ளது.
இஸ்ரேலுக்கு ஆயுதங்களை ஏற்றிச் செல்லும் கப்பல்கள் மற்றும் விமானங்கள், இனி ஸ்பெயின் துறைமுகங்களையும் வான்வெளியையும் பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என்று பிரதமர் பெட்ரோ சான்செஸ் அறிவித்தார்.
இந்தத் தடை, காசாவில் இஸ்ரேல் மேற்கொள்ளும் கொடூரமான நடவடிக்கைகளை எதிர்க்கும் நோக்கத்துடன் எடுக்கப்பட்ட ஒரு முக்கியமான முடிவாகவும் அவர் கூறினார்.