Top News
| ஐந்து புதிய அரசியல் கட்சிகளுக்கு அனுமதி | | பொத்துவில் முச்சக்கர வண்டி தரிப்பிட ஒழுங்குமுறை குறித்து ஆலோசனை  | | உயர்த்தப்பட்ட சம்பளம் ஆசிரியர்களின் வங்கி கணக்குகளில் இன்று வரவு |
Jan 22, 2026

அஸ்வெசும பயனாளிகளுக்கு செப்டம்பர் மாத உதவித் தொகை வழங்கும் திகதி அறிவிப்பு

Posted on September 10, 2025 by Admin | 305 Views

2025 ஆம் ஆண்டுக்கான செப்டம்பர் மாத அஸ்வெசும நிவாரண உதவித் தொகை நாளை மறுநாள் (12) முதல் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

இந்த நிவாரண உதவிக்காக மொத்தம் ரூ. 11,201,647,000 ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அது 1,412,574 குடும்பங்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளதாகவும் சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, செப்டம்பர் 12ஆம் திகதி முதல் தகுதி பெற்ற பயனாளிகள் தங்களது வங்கிக் கணக்குகள் மூலம் உதவித் தொகையைப் பெற்றுக்கொள்ள முடியும் என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.