பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு புதிய விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் விரைவில் அமுல்படுத்தப்பட உள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சும், போக்குவரத்து அமைச்சும் இணைந்து விசேட திட்டமொன்றை முன்னெடுக்க உள்ளதாக கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
சமீப காலமாக பாடசாலை போக்குவரத்து வாகனங்கள் தொடர்பான பல விபத்துகள் இடம்பெற்றுள்ளன. இதனால் பல மாணவர்கள் காயமடைந்ததோடு, பெற்றோர்கள் மத்தியில் அச்சமும் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், பாடசாலை வாகனங்கள் தொடர்பான நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து அமைச்சு விரைவில் பரிந்துரைகளை வெளியிடவுள்ளதாகவும், புதிய விதிமுறைகள் அனைத்து பாடசாலை வாகனங்களுக்கும் கட்டாயமாகப் பொருந்தும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்