Top News
| உயர்த்தப்பட்ட சம்பளம் ஆசிரியர்களின் வங்கி கணக்குகளில் இன்று வரவு | | குளிர் வானிலை காரணமாக வைரஸ் நோய்கள் பரவல் | | நாளை நடைபெறவுள்ள அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 7வது அமர்வு |
Jan 21, 2026

இனி பலஸ்தீன் என்ற ஒரு நாடு இல்லை, அந்நிலம் இனி எங்களுக்குச் சொந்தம்- நெதன்யாகு

Posted on September 12, 2025 by Admin | 195 Views

இஸ்ரேல் பிரதமர் பின்ஜமின் நேதன்யாகு சர்வதேச கவனத்தை ஈர்க்க புதிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார். நேதன்யாகு, பாலஸ்தீனத்தின் மேற்கு கரையில் மேலும் குடியேற்றங்களை விரிவுபடுத்தும் E1 திட்டத்திற்கு நேற்று (11) கையெழுத்திட்டார் மற்றும் மாலே அடுமிம் குடியேற்ற பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.

பேச்சுவார்த்தையில் அவர், “எங்கள் வாக்குறுதிகள் நிறைவேறி வருகின்றன. இனி பாலஸ்தீன நாடு இல்லை. இந்த நிலம் எங்களுடையது மட்டுமே. இங்கு ஆயிரக்கணக்கான புதிய வீடுகள் கட்டப்படும். நமது கலாச்சாரம் மற்றும் நிலத்தை பாதுகாப்பதில் நாங்கள் உறுதி செய்கிறோம். மேற்குக் கரையின் மக்கள் தொகை இரட்டிப்பாகும், மற்றும் இங்கு பல முன்னேற்றங்கள் நிகழும்,” என்றார்.

E1 திட்டத்தின் கீழ் இஸ்ரேல், மேற்குக் கரையில் 3,000 புதிய வீடுகளை கட்டும் திட்டத்தை செயல்படுத்தும் முனைப்பில் உள்ளது. இந்த திட்டம், மாலே அடுமிம் பகுதியில் உள்ள குடியிருப்புகளை கிழக்கு ஜெருசலேமுடன் இணைத்து, பாலஸ்தீனியர்கள் வசிக்கும் மேற்குக் கரையை முற்றிலும் துண்டிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

சர்வதேச அழுத்தத்தால் பல ஆண்டுகளாக நிறுத்தப்பட்ட E1 திட்ட பணிகள் கடந்த மார்ச் மாதத்தில் மீண்டும் தொடங்கியிருந்தது. இதன் மூலம், இஸ்ரேல் வடக்கு மற்றும் தெற்கு மேற்குக் கரையை இணைக்கும் புதிய சாலையை உருவாக்கி, பாலஸ்தீனியர்களின் முக்கிய நெடுஞ்சாலையில் பயணத்தை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டுள்ளது.

தற்போதைய நிலவரப்படி, மேற்குக் கரை மற்றும் கிழக்கு ஜெருசலேமில் உள்ள 300 சட்டவிரோத குடியிருப்புகளில் சுமார் 7,00,000 இஸ்ரேலிய குடியேறிகள் வசித்து வருகின்றனர்.