(ஒலுவில் செய்தியாளர்)
அட்டாளைச்சேனை பிரதேச சபையின் “வாரத்திற்கு ஒரு நாள் வேலைத்திட்டம்” கடந்த 06.09.2025 அன்று ஒலுவிலில் முன்னெடுக்கப்பட்டது.
இச்சிரமதான நிகழ்வு அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் அவர்களின் வழிகாட்டுதலில் ஒலுவில் அல்-ஹம்றா வட்டாரத்தைச் சேர்ந்த பிரதேச சபை உறுப்பினர் மீராலெவ்வை றினாஸ் அவர்களின் தலைமையில் ஒலுவில் முதலாம் பிரிவில் சிறப்பாக இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதேச சபையின் தவிசாளர், கெளரவ உறுப்பினர்கள், பிரதித் தவிசாளர், சபையின் செயலாளர், சபையின் அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.
இந்த வேலைத்திட்டம் பிரதேச மக்களின் தேவைகளுக்கு தீர்வுகாணும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டதாக குறிப்பிடப்படுகிறது.