(ஆலங்குளம் செய்தியாளர்)
“வளமான நாடும் அழகான வாழ்க்கை” உள்ளூராட்சி வாரத்தின் இரண்டாம் நாளான இன்று (15.09.2025)அட்டாளைச்சேனை பிரதேச சபையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை மையப்படுத்திய சிறப்பு நிகழ்வு இடம்பெற்றது.
“மறுமலர்ச்சி நகரம்” என்ற கருப்பொருளின் கீழ், சுற்றாடல் மற்றும் மரநடுகை நிகழ்வு பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ஏ. எஸ். எம். உவைஸ் அவர்களின் தலைமையில் சபை வளாகத்தில் நடைபெற்றது.
நிகழ்வின் போது பயன்தரும் மற்றும் நிழல் தரும் பல மரக்கன்றுகள் நடப்பட்டன. இதன் மூலம் சுற்றுச்சூழலை பசுமையாக்கி பாதுகாப்பை வலுப்படுத்தும் புதிய முயற்சியாக இது அமைந்தது.
இந்நிகழ்வில் பிரதித் தவிசாளர், பிரதேச சபை உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.