(அட்டாளைச்சேனை செய்தியாளர்)
உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு, “மறுமலர்ச்சி நகரம்” எனும் தொனிப்பொருளில் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் நடமாடும் சேவை நேற்று (15.09.2025) அட்டாளைச்சேனை மசூர் சின்னலெப்பை சந்தைச் சதுக்கத்தில் கௌரவ தவிசாளர் ஏ. எஸ். எம். உவைஸ் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில், தீகவாபி, திராய்க்கேணி, ஆலங்குளம், சம்புநகர், முல்லைத்தீவு, அஷ்ரப் நகர் உள்ளிட்ட பிரதேசங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை முன்வைத்து உடனடி தீர்வுகளைப் பெற்றுக் கொண்டனர்.
இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஏ.சி. அகமட் அப்கர், பிரதேச சபை உறுப்பினர்களான ஐ.ஏ. சிறாஜ், ஐ.எல். அஸ்வர் சாலி , ஏ.எல். பாயிஸ், எம்.ஏ. அன்ஸில், எஸ்.எம். றியாஸ், எம்.எப். நஜீத் (பிரதித் தவிசாளர்), சி.எம். ஜனூஸா, எம்.ஜே.எப். நஜா, எஸ். பாஹிமா, PHG. DE. சில்வா, எம்.எல்.ஏ. சமன் ஆகியோரும் பங்கேற்றனர்.
அத்துடன், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் செயலாளர் எல்.எம். இர்பான், பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஏ.எல். அலாவுதீன், மின் பொறியியலாளர் எம்.ஜே.எம். நஜிமுதீன் உள்ளிட்ட திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இந் நடமாடும் சேவையை மேற்பார்வை செய்வதற்காக அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் கமல் நெத்மினி வருகை தந்ததும் சிறப்பம்சமாகும்.