அரசு அலுவலகங்களில் பணிகளை எளிதாக்கவும், சேவைகளை வினைத்திறனாக மாற்றவும் புதிய டிஜிட்டல் கையொப்ப முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் வைத்தியர் சந்தன அபேரத்ன உரையாற்றுகையில்,
இந்த முயற்சி தற்போதைய அரசாங்கத்தின் டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்தின் முக்கிய அங்கமாகும் என்று தெரிவித்தார்.
அமைச்சின் உள்நாட்டு அலுவல்கள் பிரிவின் அதிகாரிகளுக்கான டிஜிட்டல் கையொப்ப அங்கீகார நிகழ்வு நேற்று (15) நடைபெற்றது. இந்நிகழ்வில் பங்கேற்ற அமைச்சர் அபேரத்ன, மக்கள் எதிர்பார்க்கும் திறமையான சேவையை வழங்குவதே தமது குறிக்கோள் என்றும், இந்த தொழில்நுட்பத்தை கிராம சேவையாளர்கள் வரை விரிவுபடுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
2006 ஆம் ஆண்டு 19ஆம் இலக்க மின்னணு பரிவர்த்தனைச் சட்டத்தின் அடிப்படையில், மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களில் உள்ள அதிகாரிகளின் கையொப்பங்களை டிஜிட்டல் மயமாக்கும் நடவடிக்கை இங்கு ஆரம்பிக்கப்பட்டது.
மின்னணு பரிவர்த்தனைச் சட்டத்தின் கீழ் டிஜிட்டல் கையொப்பங்களை வழங்கும் அதிகாரம் பெற்ற நிறுவனம் லங்காபே (LankaPay) ஆகும். இதன் மூலம் அலுவலகக் கடிதங்களில் ஏற்படும் தாமதங்களை தவிர்த்து, விரைவான, பயனுள்ள மற்றும் நம்பகமான சேவை வழங்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.