வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் வாக்களிக்கும் உரிமையை நடைமுறைப்படுத்துவதற்காக சட்டங்களில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதற்காக பல அமைச்சுக்களின் உயரதிகாரிகளை உள்ளடக்கிய ஒரு சிறப்பு குழுவை நியமிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு, தொடர்புடைய சட்டத் திருத்தங்களை ஆராய்ந்து, அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான நடைமுறைகளை விரைவுபடுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.