ஆசிய கிண்ண T20 கிரிக்கெட் தொடரின் வரலாற்றில் புதிய சாதனையை இலங்கை அணியின் இளம் துடுப்பாட்ட வீரர் பத்தும் நிஸ்ஸங்க படைத்துள்ளார்.
நேற்று (15) ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்ற ஹொங்கொங் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அவர் அரைசதமொன்றை விளாசினார். இதுவே அவரது நான்காவது அரைசதமாகும்.
இந்த சாதனையால், ஆசிய கிண்ண T20 வரலாற்றில் அதிக அரைசதங்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் நிஸ்ஸங்க முதலிடத்தைப் பிடித்துள்ளார். இதற்கு முன்னர் இந்திய நட்சத்திர வீரர் விராத் கொஹ்லி மூன்று அரைசதங்களுடன் முதலிடத்தில் இருந்தார்.
அதேவேளை, கொஹ்லி இன்னும் இந்த தொடரின் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமையை தக்க வைத்துள்ளார். அவர் ஒரு சதம் மற்றும் மூன்று அரைசதங்கள் உட்பட மொத்தம் 421 ரன்கள் குவித்துள்ளார்.